மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமைச்சர் மெய்யநாதன் 1660 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம். பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தரங்கம்பாடி தாலுக்கா, சங்கரன்பந்தல் (இலுப்பூர்) தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாயிலாக திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் 1660 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி கூறியதாவது
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழியில் சிறப்பாக ஆட்சி செய்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த பத்து மாதங்களாக தினந்தோறும் புதிய புதிய திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தினை கடந்த ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது அலையில் மிகுந்த நிதி நெருக்கடியான சூழ்நிலை இருந்தது. நேர்மையாக ஆட்சி செய்து நிதி சுமைகளைக் குறைத்து இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்று சிறப்பாக செயல்படுகிறார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்கின்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றுகினங்கவும் கோட்டையில் இருந்தாலும் குடிசையில் வாழும் மக்களின் வாழ்க்கைக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்ற முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் சொல்லுக்கினங்க செயல்பட்டு வருகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
விளிம்பில் அடித்தட்டு மக்களாக உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை நிலை பொருளாதார அளவில் மேம்படுவதற்காக திட்டங்களைத் தீட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல் படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டு வந்து புதிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உறுவாக்கியுள்ளார்கள் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அயராது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உழைத்து வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர்களின் அத்தனை கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு உறுதிமிக்க தலைவராக செயல்பட்டு வருகிறார். டெல்டா மாவட்டங்களில் ஒன்றிய அரசு பல அபாயகரமான திட்டங்களை இப்பகுதிகளில் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அன்றைய எதிர் கட்சித் தலைவராக இருந்த தற்போதய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சட்ட மன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார், ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை தடுத்து நிறுத்தும் முன்கள பணியாளராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநலத்துறை அமைச்சர் விண்ணப்பித்த அனைவருக்கும் நிதியுதவி சென்றடைய வேண்டும் என உத்தரவிட்டார்கள். பெண் சமுதாயம் உயர் கல்வி கற்ற சமுதாயமாக மாற்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிகள், 100 நாட்கள் வேலை திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். 6 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் உயர் கல்வி பயில வேண்டும். என்பதற்காக கலை, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பயில்பவர்களுக்கு மாதம் ரூ.1000 பட்டப் படிப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதன் மூலம் 6 இலட்சம் மாணவிகள் தமிழ்நாட்டில் பயன்பெறுவார்கள். 2398 மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவியர்களுக்கும் மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சிறப்பு திட்டமான கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் கடந்த 2010 தமிழ்நாட்டில் உள்ள ரூ.1000 ஒட்மொத்த குடிசைகளின் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, வீடு இல்லாதவர்ளுக்கு வீடு கட்ட முன்அனுமதி வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் மாநாட்டில் கருத்துக்கேட்டு, மீண்டும் கணககெப்பினை தொடங்கியுள்ளார்கள்.
2031-க்குள்ளாக அனைத்து குடிசை வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் உன்னத திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்லபடுத்தவுள்ளார்கள். ஏழை எளிய மக்கள் அனைவரும் பேரிடர் காலங்களில் துயர்படாமல் இருக்க அனைவருக்கும் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் செயல்படவுள்ளது. நரிக்குறவர், இருளர் மற்றும் பருங்குடியினர் ஆகியோரது வீடுகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான். நரிக்குறவர் இனத்தவர்க்கு சமபந்தியில் உணவில்லை என்று கூறியதற்க்கு அமைச்சர் அவர்களை நேரில் சென்று அன்னதானம் உண்ண அறிவுறுத்தியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே. இது ஏழை மக்களின் ஆட்சியாக திகழ்கிறது. ஒரு 20 மணி நேரம் மக்களுக்கு அயராது உழைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் கூறினார்.
சங்கரன்பந்தல் (இலுப்பூர்) தனியார் திருமண மண்டபத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வாயிலாக ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின் கீழ் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் 25 மீனவ மகளிர் சுய குழுக்களுக்கு மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் ரூ.18.75 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
முன்னதாக மயிலாடுதுறை நாராயணப்பிள்ளைத் தெருவில், கூட்டுறவுத்துறை சார்பாக ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள மயிலாடுதறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா.எம். முருகன், சீரகாழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி நகர்மன்றத் தலைவர் தூர்கா பரமேஸ்வரி, சீர்காழி ஊராட்சி ஒன்றியத் தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் என்.செல்வராஜ், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத் தலைவர் காமாட்சி மூர்த்தி, குத்தாலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கே.மகேந்திரன், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) சண்முகம், குத்தாலம் பேரூராட்சித் தலைவர் சங்கீதா, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணாசங்கரி, மாவட்ட சமூக நல அலுவலர் சாமூண்டீஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வே.பெரியசாமி, துணைபதிவாளர்கள் ஆர்.மனோகரன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி திமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், மங்கை சங்கர், இமயநாதன், மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் உடனுள்ளனர்.