0 0
Read Time:2 Minute, 31 Second

கடலூர், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முருகுமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் நல்லூர் பச்சமுத்து, கீரப்பாளையம் விநாயகமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் மேனகா விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டமானது, தி.மு.க. அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதில் மாவட்ட பேரவை செயலாளர்கள் ரவிச்சந்திரன், உமா மகேஷ்வரன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரமேஷ், பேரூராட்சி செயலாளர்கள் திட்டக்குடி நீதி மன்னன், பெண்ணாடம் மதியழகன், ஒன்றிய செயலாளர்கள் விருத்தாசலம் தம்பித்துரை, கம்மாபுரம் சின்ன ரகுராமன், கீரப்பாளையம் கருப்பன், நல்லூர் பொன்னேரி முத்து, ராஜேந்திரன், அரசு வக்கீல் விஜயகுமார், கோவை மண்டல துணைச் செயலாளர் வக்கீல் அருண், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் கனக சிகாமணி, விருத்தாசலம் நகர அவைத் தலைவர் தங்கராசு, அரங்க.மணிவண்ணன், ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரா, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %