0 0
Read Time:2 Minute, 3 Second

சென்னை – சேலம் இடையேயான பசுமைவழி சாலை திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, 3 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி மதிப்பீட்டில் நாடு முழுவதும் 8 ஆயிரத்து 301 கிலோ மீட்டர் நீளமுள்ள 22 பசுமைவழிச் சாலைகள் அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வரும் 22 பசுமைவழிச் சாலைகளில் தமிழகத்தில் சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-சேலம் இடையே 2 பசுமைவழிச் சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் சென்னை-பெங்களூரு இடையிலான 262 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகளில் 45 கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், சென்னை-சேலம் இடையிலான 277 கிலோ மீட்டர் நீளமுள்ள பசுமை வழி சாலை அமைப்பதற்கான பணிகள் இப்போது வரை துவங்கவில்லை எனவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் திட்டமிட்டபடி 2024 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் பசுமைவழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %