0 0
Read Time:2 Minute, 1 Second

சேலம் நெத்திமேடு, காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் நெத்திமேட்டில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை யொட்டி, கடந்த 3-ந்தேதி விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. 4-ந்தேதி கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அன்று இரவு 7 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்கியது. 5-ந்தேதி காலையில் 2 மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

நேற்று 4-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 9.45 மணிக்கு கலசத்திற்கு சிவாச்சாரியார்களால் புனித நீர் தெளித்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கோவில் வளாகத்தை சுற்றி நின்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டதுடன், மலர்கள் தூவப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.. மேலும் கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %