100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் 01-04-2022 முதல் ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டம் பிப்ரவரி 2006ல் இந்திய அரசால் தொடங்கப்பட்டது என்றும், இது ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரக குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை தரும் திட்டமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திறன் சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் ஊரக விலை பட்டியலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாகவும், ஒரு வயது வந்த நபர் ஒரு மணி நேரம் உணவு இடைவெளியுடன் கூடிய 8 மணி நேர வேலைக்கு பெறக்கூடியதற்கு சமமாக நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021-22-ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட ஊதியம் நாளொன்றிற்கு ரூ.273 ஆக நிர்ணயிக்கப்பட்டது என்றும், 2022-23ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்டதற்கான ஊதியம் 01.04.2022 முதல் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வேறுபாடின்றி தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.281 என்று திருத்தி அமைக்கப்படுவதாக ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.