0 0
Read Time:1 Minute, 45 Second

திருவெண்காடு, சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு கிராமத்தில் சொர்ணாம்பிகை அம்மன் சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு தனி சன்னதியில் விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பைரவர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இங்கு மூலவர் சொர்ணபுரீஸ்வரர், அம்பாள் சொர்ணாம்பிகை ஆகியோரை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் நம்மை பிடித்த பீடைகள் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும்.

மேலும், தடையில்லாமல் வருமானம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சூரிய பகவான், சொர்ணபுரீஸ்வரர் சுவாமியை தனது சூரிய ஒளியால் பூஜை செய்வதாக ஐதீகம்.

இத்தகைய சிறப்பு பெற்ற சிவ சூரிய பூஜை நேற்று அதிகாலை நடந்தது. அப்போது சூரிய ஒளிக்கதிர்கள் கோபுரத்தின் வழியாக கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கம் மீது விழுந்தது. இதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

பின்னர் சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %