கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று இரவு மிதமான கோடை மழை பெய்தது இந்த சிறு மழைக்கே குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கழிவு நீர் வடிகால்கள் முறையாக இல்லாததால் கழிவுநீர் பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கழிவுநீர் குளம் போல் தேங்கி சாக்கடை சகதியுடன் காட்சி அளித்தது கோடை மாதத்தில் பெய்த மிதமான மழைக்கே பேருந்து நிலையம் இந்த அவலநிலைக்கு உள்ளது எனில்,
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் கழிவு நீர் கால்வாய்கள் எந்த அளவுக்கு பராமரிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிகிறது இனிவரும் மழைக்காலத்திற்கு உள்ளது இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர்க் கால்வாய்களை முறையாக தூர்வாரி புதிய கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுமா என பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் துப்புரவு பணியாளர்கள் பணியின் போது கையுறை கால்களுக்கு அணியக்கூடிய கம்பூட் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்வதும் தொடர்ந்து தொடர்கதையாகி வருகிறது எனவே துப்புரவு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி அவர்கள் பணி பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுகிறது.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்