தமிழக காவல்துறை இயக்குனர் கனம் DGP L&O, மற்றும் கனம் ADGP/RLY/CNI உத்தரவின்பேரில் கஞ்சா வேட்டை 2.0 வின் ஒரு பகுதியாக 09.04.2022 ம் தேதி சிதம்பரம் இரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில், வண்டி எண் 20896 (BBS to RMM) புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு வண்டி சிதம்பரம் நடைமேடை எண் 1ல் வந்து சேர்ந்தபோது,
தடை செய்யப்பட்ட பொருட்களான பான் மசாலா, குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தணிக்கை செய்ததில் D2 கோச்சில், பீகார் மாநிலத்தை சேர்ந்த, விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு பயணம் செய்த எதிரி அலாம் என்பவரிடமிருந்து, சந்தேகப்படும்படியாக இருந்த மூட்டையை சோதனை செய்ததில், அதில் 36 பாக்கெட்டுகளில் தம்பாக்கு, சுமார் 12.5 கிலோ இருந்ததை கைப்பற்றி நிலையம் அழைத்து வந்து எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூபாய் 3888/- மேற்கண்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து 13 நாட்கள் நீதிமன்ற அடைப்பு காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் எதிரியை சிதம்பரம் கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
நிருபர்:பாலாஜி