0 0
Read Time:2 Minute, 20 Second

மயிலாடுதுறை, பனை, தென்னங்கள்ளுக்கு அனுமதி அளிப்பதோடு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை கிராமமக்கள் கடந்த 80 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பனை, தென்னங்கள்ளுக்கு அனுமதி அளிக்கக்கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில், மயிலாடுதுறை ரயில்வே தபால் நிலையத்தில் இருந்து விவசாயிகள் கோரிக்கை கடிதம் அனுப்பினர்.

அந்தக் கடிதத்தில், சங்க காலத்திற்கு முன்பிருந்தே உணவின் ஓர் அங்கமாக இடம் பெற்றுள்ள கள்ளில் ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் கள்ளுக்கு தடை விதிக்கப்படவில்லை. நமது அண்டை மாநிலமான கேரளா, கள்ளை பாரம்பரிய உணவாகவும், ஆரோக்கிய பானமாகவும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 1980-ம் ஆண்டு முதல் கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பனை, தென்னங்கள் விற்க அனுமதி அளிப்பதோடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அந்தச் சங்கத்தினர் கடிதம் அனுப்பி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %