மயிலாடுதுறை வீரதமிழச்சி சிலம்பாட்ட கழகம் சார்பாக தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக ID card அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்பாட்ட பயிற்சி எதிராக முறையாக மேற்கொண்டு வருகின்றன மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்திய இளைஞர் வாழ்க்கை அக்கறை அறக்கட்டளை இயக்குனர், முன்னாள் ராணுவ வீரர் பெத்தபெருமாள் தலைமையில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் அடையாள அட்டைகளை வழங்கி வாழ்த்தினார்.அப்போது அவர் பேசுகையில் மயிலாடுதுறை பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் ராணுவ வீரர் பெத்தபெருமாள் தீவிர முயற்சியில், தினசரி உடற்பயிற்சி,நடைப்பயிற்சி, யோகா, சிலம்பம், அதோடுகூட காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு பணியில் சேர உடல்தகுதி தேர்வு எழுத்துத்தேர்வு பயிற்சிகள், நற்பண்பு களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது மற்றற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது.
எதிர்கால இளைய சமூகம், தற்கால அகபுற ஆபத்தான இச்சைகளுக்கு ஆளாகி சீரழிந்துவிடாமல் தடுத்து, உரிய நேரத்தில் உரிய பயிற்சிகள் அளிப்பதன் மூலம் அவர்களின் ஆற்றலைப் பெருக்கி இலக்கை நோக்கி மடைமாற்றி, திசை திருப்பிடும் முயற்சியையும் பயிற்சியையும் அளிக்கின்ற செயல் மிகவும் பாராட்டுக்குரியது. நல்லதொரு சமூகம் உருவாவதற்கு வித்திடும் முன்னாள் ராணுவ வீரர் பெத்த பெருமாளின் பணி சிறக்க மாண்புமிகு தமிழக முதல்வர்மு,க.ஸ்டாலின் , மற்றும் மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் அவர்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் கொள்கிறேன் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வாழ்த்து தெரிவித்து பேசினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிலம்பாட்ட பயிற்சி மாஸ்டர் விக்ரம் நன்றி கூறினார்.