கடலூர் தாலுக்கா அலுவலகம் பின்புறம் இயங்கிக்கொண்டிருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட அரசு அலுவலகம் முதியோர் பென்ஷன் விபத்து இறப்பு பயன் உள்ளிட்டவைகள் தரக்கூடிய அலுவலகம் 10 மணிக்கு திறக்க வேண்டியதை கடந்து தினசரி 11 மணிக்கு மேலும் 12 மணிக்கு மேலும் அதிகாரிகள் வருவதால் முதியவர்கள் முதல் குடும்பத் தலைவர்களை இழந்தவர்கள் வரை மனுக்களை கொடுக்க முடியாமலும் அரசு பயன்களை பெற முடியாமலும் காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் வீட்டில் பிள்ளைகளை தனியாக விட்டில் விட்டு வருவதாகவும் முதியவர்கள் அலுவலகத்தில் நேரங்கள் அதிகமாக கடந்து போவதால் இதர செலவுகள் அதிகமாக ஆகிவிடுவதாகவும் கூறிவருகின்றனர் ஆகையால் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தை அலுவலக நேரத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்