சிதம்பரம் நகர மன்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது நகர மன்ற துணைத் தலைவர் முத்து நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் முன்னிலை வகித்தனர்.
நகரமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள் அதற்கு பதிலளித்த தலைவர் கே ஆர் செந்தில்குமார் பேசுகையில் நகராட்சியில் சொத்து வரி தொடர்பான உறுப்பினர்களின் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இது போன்று பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள் சிதம்பரம் நகராட்சி பொருத்தவரை எந்த முடிவாக இருந்தாலும் தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை அதன்படி அனைத்து கவுன்சிலரின் கருத்துக்களை கேட்ட பின்னரே எடுக்கப்படும் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
சிதம்பரம் நகராட்சியில் ரூ.1.50 கோடியில் மின்மயானம் அமைக்கும் பணிகளுக்கு ஒப்புதல் தருவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் அப்பு சந்திரசேகர் மணி தில்லை மக்கீன் சுதாகர் ராஜன் சுதா குமார் சுனிதா மாரியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிருபர்:பாலாஜி