0 0
Read Time:2 Minute, 24 Second

தரங்கம்பாடி, ஏப்ரல்- 13;
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு தரமான அரிசி அனுப்பி வைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பி வைத்திட சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் புதன்கிழமை தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அடுத்து கிடாரம்கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசியின் தரம் குறித்தும், எடை அளவு குறித்து ஆய்வு செய்தார்.

மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 90 நியாய விலை கடைகளுக்கும் தரமான அரிசி அனுப்பி வைத்திடவும், தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைத்திடவும் கிடங்கு தரக்கட்டுப்பாட்டு அலுவலருக்கு உத்தரவிட்டார். கிடங்கு ஆய்வின்போது தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, கிடங்கு உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ராகவன் மற்றும் நகர்வு எழுத்தர்கள், பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %