அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கையின் சார்பில் அண்ணல். அம்பேத்கர் அவர்களின் 132வதுபிறந்தநாள்விழா 13.04.2022(புதன்கிழமை) அன்று காலை 10:30 மணிக்கு டெக்-பார்க், ஹைடெக் அரங்கத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர். க.சௌந்திரராஜன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர். இராம. கதிரேசன் அவர்கள் விழா தலைமையுரையாற்றினார். சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நம் இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் பாடுபட்டதை எடுத்துரைத்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.கி.சீத்தாராமன் அவர்கள் விழாவில் முன்னிலையுரையாற்றினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்போல், இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அவரை ஒரு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு, நம்நாட்டில் இன்னும் பல அம்பேத்கர்கள் உருவாகவேண்டும் என கூறினார்.n டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கு இவ்விழாவின் சிறப்புவிருந்தினர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், புலமுதல்வர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மலர் தூவிமரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் முனைவர்.மு.கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றினார். அவரது உரையில் நம்பல்கலைக் கழக மாணவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களை ஒருவழிகாட்டியாக எடுத்துக்கொண்டு, பல தடைகளை கடந்து வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்று கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்தியமொழிப்புல முதன்மையர் பேராசிரியர்க.முத்துராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்புப் பேச்சாளராக பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் திருமதி. கவிதாஜவஹர் அவர்கள் கலந்துகொண்டு “அம்பேத்கர்எனும்ஆசான்” என்ற தலைப்பில் விழாப் பேருரையாற்றினர்.
அவர் தனது உரையில் சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் அவர்களுடைய வாழ்வில் பல இன்னல்களையும், சவால்களையும் எதிர் கொண்டு எப்படி வெற்றி பெற்றார் என்றும், இந்தசமுகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய போராடினார் எனவும் எடுத்துரைத்தார். டாக்டர் அம்பேத்கர் இருக்கையின் உதவிப்பேராசிரியை முனைவர்.வீ.ராதிகாரணி அவர்கள் நன்றியுரையாற்றினார் விழா ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர்.க.சௌந்திரராஜன் மற்றும் உதவிப்பேராசிரியை முனைவர் வீ.ராதிகாராணி அவர்கள் செய்திருந்தனர்.
இவ்விழாவில் பல்கலைக் கழக புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ஊழியர்கள் சங்க தலைவர்கள் & உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
நிருபர்:பாலாஜி