ஒவ்வொரு வருடமும் மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த 61 நாட்களும் மீனவர்கள் கடலுக்கு
செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதுமுள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கடல் பகுதியில் 37 மீன்பிடித் தளங்களில் 1,500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தடை காலம் அமலானதால் தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு மீனவர் பேரவை செயலாளர் தாஜுதீன், ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாத மழைக்காலங்களில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.