பெட்ரோல், கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம் மற்றும் பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் விருத்தாசலம் பாலக்கரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியராஜா, தொகுதி துணை செயலாளர் பீட்டா், தொகுதி தலைவர் சக்திவேல், துணை தலைவர்கள் முருகன், அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் ஜெகன் மோகினி வேடம் அணிந்த ஒருவர், சமையல் அடுப்பில் கால்களை வைத்து, வானல் பாத்திரத்தில் சமைப்பது போல நூதன போராட்டமும் நடைபெற்றது.
இதில் ராஜேந்திரன், மாணிக்கம், பிரபாகரன், சந்தோஷ், பழனிவேல், தனலட்சுமி, ஜெகநாதன், மணிகண்டன், பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.