நெல்லிக்குப்பம் நகராட்சியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணாமாக கந்தசாமி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு கழிவு நீரும், மழை நீரும் தேங்கி சாலையில் குட்டை போல் நின்றது.
நேற்று காலை நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் துப்புரவு அலுவலர் சக்திவேல், செல்வம், கவுன்சிலர் சத்யா மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அடைத்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாயில் கழிவு நீரை வெளியேற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் குட்டை போல் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ராமு வீதி மற்றும் 9-வது வார்டு முழுவதும் நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.