0 0
Read Time:1 Minute, 39 Second

சென்னை கொருக்குப்பேட்டை 3-வது தெரு, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 52). இவர், நேற்று திருவண்ணாமலையில் இருந்து தனது காரில் மனைவி ஆனந்தி, மகள் நந்தினி ஆகியோருடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே வரும்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், காரை ஜி.எஸ்.டி. சாலை ஓரமாக நிறுத்தினார். காரில் இருந்த 3 பேரும் கீழே இறங்கி தூரமாக ஓடிபோய் நின்று கொண்டனர். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மறைமலைநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %