0
0
Read Time:1 Minute, 5 Second
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவமும், கடந்த 14-ந்தேதி தேரோட்டமும் நடந்தது. நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. இதனையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார்.
பின்னர் தீபாராதனையுடன் கோவில் தீர்த்த குளத்தில் மூன்றுமுறை தெப்பம் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.