மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி அபிராமி நகரில் உடைந்த பாலத்தை புதிதாக கட்டித்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளாலகரம் கிராம ஊராட்சியில் அமைந்துள்ள300க்கு மேற்பட்ட குடியிருப்புகளை கொண்ட அபிராமி நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயன் படக்கூடிய சாலையின் நடுவில் வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள காங்கிரீட் பாலம் நடுவில் உடைந்து விழுந்து பல மாதங்களாக அப்படியே கிடைக்கின்றது.
இந்நகருக்கு புதிதாக வருபவர்கள் பாலம் உடைந்து இருப்பது தெரியாமல், நான்கு மற்றும் இருசக்கர வாகனத்தில் உடைந்த பகுதியில் விழுந்து விபத்துக்கள் ஏற்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. இதுகுறித்து சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரத்திடம் அபிராமி நகர் நல சங்க நிர்வாகிகள் ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமலிங்கம், ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் சேகர், ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை காவலர் முருகன், திமுக நிர்வாகிகள் ஆர். ஆர். பாபு , ஏஜி கோபு, கார்த்திகேயன் ஓய்வு பெற்ற ஆசிரியர் இளமுருகு செல்வன் சுதந்திர தாஸ் உள்ளிட்டோர் உடைந்த பாலத்தின் அவல நிலை குறித்து நேரில் பார்வையிட்டு கோரிக்கையை எழுப்பியுள்ளார்கள்.
அப்பகுதியில் இப் பாலத்திற்கு அருகில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்திற்கும், நாகத்தம்மன் ஆலயத்திற்கும் வழிபாட்டிற்காக நகரவாசிகள் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் அடிக்கடி வருகை தருவதால் இந்தப் பாலத்தின் நிலை தெரியாமல் உள்ளே விழுந்து உயிரிழப்புசேதம் ஏற்பட்டு விடுமோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேரத்தில் பாலத்தின் அருகே விளக்கொளி இல்லாத காரணத்தினாலும், மழையின் பொழுதும் நிச்சயம் மிகப்பெரிய விபத்து ஏற்படுவது உறுதி. இப்பாலம் குறித்து பலமுறை எடுத்துக் கூறியும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது என்பது வேதனை அளிக்கிறது.
உடனடியாக மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆணையர், பொறியாளர் அப்பகுதியை பார்வையிட்டு மக்களுக்குப் பயன்படக்கூடிய பாலத்தினை புதிதாக அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.