புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்திற்கு மாண்புமிகு தமிழக
ஆளுநர் R N ரவி வருகை!
தரங்கம்பாடி, ஏப்ரல் – 19, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயத்திற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் R N ரவி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மூன்று மாவட்ட கண்காணிப்பாளர்கள் ( மயிலாடுதுறை மாவட்டம் – நிஷா, தஞ்சாவூர் மாவட்டம் -ரவளி ப்ரியா, திருவாரூர் மாவட்டம் – விஜயகுமார் ) தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். காலை 7 மணி முதலே போலீசார்கள் குவிக்கப்பட்டு இருந்தார்கள்.
காலை 7 மணிமுதல் இருந்து அரசு அதிகாரிகள் வந்தவாறு இருந்தார்கள். மாவட்ட ஆட்சியர் இரா லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, தனி வட்டாட்சியர் இந்துமதி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் பல அரசு அலுவலர்கள் ஆளுநர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் பொழுது சரியாக ஒன்பது மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்தார் ஆளுநர்.
ஆளுநரை; மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் – இரா லலிதா அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கோவில் நிர்வாகத்தின் சார்பாக – காசாளர் ஸ்ரீராம் வரவேற்று ஆளுநருக்கு சால்வை அணிவித்தார்.
கணேச குருக்கள் மற்றும் அவருடைய குழுக்கள் சிறப்பு மந்திரம் சொல்லி ஆளுநரை உள்ளே வரவேற்றார்கள். பிறகு ,யானைக்கு மாலை அணிவித்து ஆசி பெற்றார் பின்பு பசுவுக்கு வாழைப்பழம் கொடுத்து பூஜைகள் செய்து ஆசி பெற்றார் ஆளுநர் அவர்கள்.
அடுத்ததாக ஸ்ரீ கள்ளவாரண பிள்ளையாரை வழிபட்டு விட்டு, கோவிலை சுற்றி வந்து அமிர்தகடேஸ்வரர் சுவாமியை வழிபட்டார்.
தருமபுரம் ஆதின இளைய குறுமுணிகள் அபிராமி அம்மனின் தரிசனத்தின் போது அம்மன் படத்தை ஆளுநரிடம் வழங்கினார்கள். சிறப்பு பிரத்தனைகளும், பூஜைகளும் நடைபெற்றது.
செய்தியாளர்
க சதீஷ்மாதவன்