புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் 180 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்,பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்.
கொள்ளிடம் அருகே, புத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1,078
மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
தமிழ்த்துறைத் தலைவர் சசிகுமார் வரவேற்றார். இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் கலந்துகொண்டு 180 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவ-மாணவிகள் இன்னும் பல உயரிய பட்டங்களை பெற வேண்டும்.
வள்ளுவரின் குறளுக்கு, ஏற்ப வாழ்க்கையில் உச்ச நிலைகளை அடைய வேண்டும். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றார். விழாவில், கல்லூரி பேரவை பொறுப்பாசிரியர் நாராயணசாமி மற்றும் துறை தலைவர்கள், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.