மயிலாடுதுறை மாவட்ட மொத்த மற்றும் சில்லறை உர விற்பனையாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், உர விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் உரக்கட்டுப்பாட்டு ஆணை மற்றும் அத்யாவசிய பொருட்கள் ஆணையை முறையாக பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு, அரசு பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
உரக்கடைகளில் விலைப்பட்டியல், இருப்பு விவரம் ஆகியவற்றை அனைவருக்கும் தெரியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
விற்பனை முனைய கருவிக்கும், உரம் இருப்பு பதிவேடுகளில் உரத்தின் இருப்பும் ஒன்றாக இருக்க வேண்டும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வேளாண்மை துணை இயக்குனர் ஜெயபாலன், உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சிவவீரபாண்டியன் மற்றும் வேளாண் உதவி இயக்குனர்கள், மயிலாடுதுறை மாவட்ட இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க கவுரவத்தலைவர் ரவிச்சந்திரன், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.