0 0
Read Time:1 Minute, 57 Second

தஞ்சாவூர் – சாயல்குடி சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் எம்எல்ஏ தமிழரசியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, பரமக்குடி, இளையான்குடி, காளையார் கோவில், கல்லல் ஆகிய பகுதிகளை இணைக்கும் தஞ்சாவூர் – சாயல்குடி சாலையை 90 கோடி ரூபாய் செலவில் இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், போக்குவரத்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் 4 வழிச்சாலையாக அமைத்துத் தரப்படும் என குறிப்பிட்ட அவர், மாநிலம் முழுவதும் உள்ள தரைப்பாலங்களை, மேம்பாலங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்ட பாலம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வலியுறுத்திள்ளதாக தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, கரூர் – கோவை இடையேயான சாலையை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

நிதிநிலைக்கேற்ப ஆங்காங்கே பணிகள் நடைபெற்று வருவதாகவும், கோவையை புறக்கணிக்கவில்லை எனவும் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %