0 0
Read Time:1 Minute, 50 Second

கடலூர், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, மாவட்ட அளவிலான போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார்.

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மேலும் கபடி, டென்னிஸ், வாலிபால் உள்ளிட்ட குழு போட்டிகளும் நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு போட்டியும் முடிந்ததும், வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %