1 0
Read Time:3 Minute, 20 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் நேரடியாக பங்கேற்கலாம் என மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால், தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குள் (பொதுபிரிவினர்) இருக்க வேண்டும். இந்த தேர்விற்கு ஏப்ரல் 7-ந் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். எழுத்து தேர்வானது வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 24-க்குள் (பொதுபிரிவினர்) இருக்கவேண்டும்.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக மேற்கண்ட சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மார்ச் 22-ந்தேதி முதல் பூம்புகார் கல்லூரியில் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பணிக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியினை குறிப்பிட்டு 63834 89199 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போட்டித்தேர்வு எழுதும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் நேரடியாக பங்கேற்று பயனடையலாம். இது தொடர்பான தகவல்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04364-299790-ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %