0 0
Read Time:1 Minute, 44 Second

குத்தாலம் அருகே, கிளியனூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் கோபி, ஒன்றிய குழு உறுப்பினர் சுகந்தவள்ளி ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

குத்தாலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் வரவேற்றார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இ.சி.ஜி., ரத்தம், கண் போன்ற பரிசோதனைகளும், எலும்பு, காது, மூக்கு, தொண்டை, பல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி டாக்டர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள், கீரைகள் ஆகியவற்றின் நன்மைகள் அடங்கிய விளக்கப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கொரோனா தடுப்பூசி முகாமும் நடந்தது.

இதில், மருத்துவ அலுவலர் மதுமதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன் மற்றும் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %