0 0
Read Time:2 Minute, 42 Second

டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திட்டக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை பெரியசாமி என்பவர் ஓட்டினார். பாளையம் கிராம பகுதியில் சென்றபோது அங்கு சாமி ஊர்வலம் நடைபெற்றது.

இதையடுத்து பஸ்சை சாலையோரமாக இயக்கியபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கட்டையில் பஸ் மோதியது. இதில் சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து டிரைவர் பெரியசாமியை தாக்கியதாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று தங்களது பணியை புறக்கணித்து பணிமனை முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா மற்றும் பணிமனை மேலாளர் மாரியப்பன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். ஊழியர்கள் திடீர் போராட்டத்தால் சுமார் ½ மணி நேரம் திட்டக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %