0 0
Read Time:1 Minute, 36 Second

திரு.வி.க. நகர், சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 24). தொழில் அதிபரான இவர், கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவிலிருந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள கசகசா என்ற உணவு பொருட்களை துறைமுகம் வழியாக கன்டெய்னரில் கொண்டு வந்தார்.

அதற்கு தகுந்த ஆவணங்கள் இல்லாததால் துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகள் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சீனிவாசன், தினமும் சுங்க வரித்துறை அலுவலகத்தில் கையெழுத்துப்போட சென்று வந்தார். அப்போது அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த சீனிவாசன், நேற்று முன்தினம் இரவு 30 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %