தரங்கம்பாடி, ஏப்.22.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஊராட்சிகளில் நடைபெறுகிறது.
கீழ்வரும் 59 ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வருகின்ற 24-04-2022 ஆம் தேதி கிடாரங்கொண்டான், கருவாழக்கரை, கிடங்கல், திருவிளையாட்டம், அரசூர், காட்டுச்சேரி, கீழமாத்தூர், கீழப்பெரும்பள்ளம், மேலையூர், நத்தம், மடப்புரம், செம்பனார் கோவில், பரசலூர். 25-ஆம் தேதி ஆறுபாதி,பாகசாலை, மருதம் பள்ளம், ஈச்சங்குடி, கில்லியூர், உடையவர்கோயில்பத்து. 26 -ஆம் தேதி கீழையூர், கஞ்சாநகரம், மாமாகுடி, கொத்தங்குடி, எருக்கட்டாஞ்சேரி, மாத்தூர், ராமச்சந்திரன்கோவில்பத்து, பிள்ளை பெருமாநல்லூர். 27-ஆம் தேதி திருச்சம்பள்ளி, கொண்டதூர், அன்னவாசல், சந்திரபாடி. 28-ஆம் தேதி முக்கரும்பூர், சேமங்கலம், மேலப்பெரும்பள்ளம், நரசிங்க நத்தம், திருவிடைகழி, திருக்களாச்சேரி, நடுக்கரை கீழபாதி, நெடுவாசல். 29-ஆம் தேதி இளையாளூர், காழியப்பநல்லூர், கூடலூர். 30-ஆம் தேதி நல்லாடை, எடுத்துக்கட்டி சாத்தனூர், முடிகண்டநல்லூர்.
01-05-2022-ஆம் தேதி மேமாத்தூர், காலமாநல்லூர், விசலூர், சித்திரங்குடி மாணிக்க பங்கு இலுப்பூர் எரவாஞ்சேரி ஆக்கூர் பண்டாரவாடை நடுக்கரை மேலப்பாதி, காலகஸ்திநாதபுரம், தில்லையாடி, திருக்கடையூர் ஆளவேலி ஆகிய ஊராட்சிகளில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2000/- பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் பயிர் காப்பீடு தொடர்பான விவரங்கள் குறித்து வேளாண்மை துறை தோட்டக்கலை துறை வேளாண்மை, வணிகதுறை, வேளாண் பொறியியல் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செம்பனார்கோவில் உதவி வேளாண்மை இயக்குனர் பா. தாமஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இம்முகாமில் செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை, ஆத்மா திட்டம், பொறியியல், விதை தறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.