Read Time:1 Minute, 6 Second
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமண விழாவில் பங்கேற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் மொய் வைப்பது வழக்கம்.
ஆனால், இந்த திருமண விழாவில் பங்கேற்ற நண்பர்கள் சிலர் மணமக்களுக்கு ஏதாவது வித்தியாசமான பரிசை அளிக்க முடிவு செய்தனர். நீண்ட யோசனைக்கு பிறகு தற்போது பெட்ரோல் விலை உச்சத்தில் இருப்பதை கருத்தில்கொண்டு 5 லிட்டர் பெட்ரோைல மணமக்களுக்கு பரிசாக வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி, ஒரு கேனில் 5 லிட்டா் பெட்ரோல் வாங்கி வந்து அதனை நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மணமக்களுக்கு பரிசாக வழங்கினர்.