0 0
Read Time:2 Minute, 46 Second

நியாய விலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல் குறித்து, எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஆதார் எண் இணைக்கப்பட்டு விரல் ரேகை சரிபார்ப்பின் மூலம் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றார்.

இதன்படி ரேஷன் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் வந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், தங்கள் பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

பிரதிநிதிகளை நியமிப்பதற்கான படிவங்கள் ரேஷன் கடைகளிலும், உணவுத்துறையின் பிரத்யேக இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அதை நிரப்பி விண்ணப்பித்து, பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 39 ஆயிரத்து 803 அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் அட்டைகளில், 98 புள்ளி இரண்டு மூன்று சதவிகித அட்டைகளுக்கு கைரேகை சரி பார்ப்பின் மூலம், பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார். கைரேகை மற்றும் இதர பிரச்சனைகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

மகாராஷ்டிரா, தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கண் கரு விழி சரி பார்ப்பின் மூலம் செயல்படுத்தும் நடைமுறை ஏற்கனவே உள்ளது என்றும், இதனடிப்படையில், தமிழகத்தில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் இரண்டு இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

இத்திட்டம், தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %