0 0
Read Time:2 Minute, 43 Second

கடலூர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு நடந்த தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு வினாத்தாளை முன்கூட்டியே மாணவர்களுக்கு வழங்கி, தேர்வு எழுத வைத்து, அதை தேர்வின் போது இணைத்து வழங்கியது போன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டது.

இது பற்றி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் இந்த முறைகேடு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றதால், இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

அதன்படி கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 20 ஆசிரியர்கள், 127 மாணவர்கள் என 147 பேர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது.

இது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 28.2.2022 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் தொடர்புடைய 147 பேரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி இன்று இந்த வழக்கில் தொடர்புடைய 126 பேர் கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகர் முன்பு ஆஜரானார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய 2 மாணவர்கள், ஒரு ஆசிரியர் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் சமர்பிக்கப்பட்டது.

மற்றவர்கள் ஆஜராகவில்லை. சிலருக்கு அவர்களின் வக்கீல்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மே) 25-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %