மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் கடவாசல் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 29-வது மாநாடு நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் குமார் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
சீர்காழியிலிருந்து கொள்ளிடத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும். கொள்ளிடத்தை இரண்டாக பிரித்து திருமுல்லைவாசலை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும்.
கொள்ளிடம் ஒன்றியத்தில் புதுப்பட்டினம், திருமுல்லைவாசல், மாதானம் ஆகிய 3 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். சீர்காழி முதல் பச்சை மாதானம், கண்ணுக்கு இனியனார் கோவில், மாதானம், வழியாக பழையார் வரை பள்ளிகூட நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சிவராமன், ஒன்றிய பொருளாளர் ஜெயா சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன் நன்றி கூறினார்.