1 0
Read Time:2 Minute, 46 Second

மயிலாடுதுறை, ஏப்ரல்- 29;
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு (ம) மருந்து துறை மற்றும் ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை சார்பாக 75 ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொது மக்கள் 100 சதவிகிதம் கொரோனா நோய் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளுதல் மற்றும் வீடு கட்டும் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது

1000 நபர்களுக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தாமல் நிலுவையில் உள்ள ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் தடுப்பூசிகளை செலுத்துவதன் அவசியம் குறித்து விளக்கி எவ்வாறு தடு தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதை பற்றி எடுத்துரைக்கப்பட்டது

சுகாதாரத்துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி துறை ஆகிய துறைகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் (ம) செயலாளர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்குள் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்ளாதவர்களை கணக்கெடுப்பு செய்து அவர்களின் விவரங்களை சேகரித்து சனிக்கிழமை 30.04.2022 அன்று நடைபெறும் சிறப்பு சிறப்பு தடுப்பூசி போடும் முகாமில் பங்கேற்க செய்து தடுப்பூசிகளை செலுத்தி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இவ்ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இனண. இயக்குநர் சு.முருகன்னன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர்/ இணை இயக்குநர் கவிதப் பிரியா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.குமரகுருபரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %