0
0
Read Time:1 Minute, 9 Second
சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.-3 (ஏ), எப்.எல்.-3 (ஏ.ஏ.) மற்றும் எப்.எல்.-11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
இதனை தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்