0 0
Read Time:2 Minute, 4 Second

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே, புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 25-ந் தேதி விநாயகர் பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், விஜய கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, லட்சுமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதனையடுத்து கடந்த 26-ந் தேதி முதல் கால யாக பூஜையும், 27-ந் தேதி இரண்டாம் கால யாகபூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 28-ந் தேதி நான்காம் கால யாக பூஜை மற்றும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

நேற்று ஆறாம் கால யாக பூஜையும், தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையோடு கடம் புறப்பட்டு கோவில் விமான கலசத்தை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து கோபுர கலசத்திற்கு குடமுழுக்கும், பின்னர் மூலஸ்தான குடமுழுக்கும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

விழாவையொட்டி சீர்காழி பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீசார் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %