அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றுள்ளார், அப்போது, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கு முன்பு, அவர் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டதால் அலுவலக பணியில் இருந்த முத்தழகு என்ற தீயணைப்பு வீரரிடம் அலுவலகத்தில் குறைகள் ஏதும் உள்ளதாக என்ற விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், ஆண்டிபட்டி காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்று, அங்குள்ள வீடுகளுக்கு சென்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். குடியிருப்பு வளாகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த கேட்டறிந்திருந்தார். இந்நிலையில் அவர் இன்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் பாரட்டப்படுகிறது.