அடிப்படை வசதிகள் மற்றும் அரசு அறிவிக்கும் எந்த ஒரு சலுகையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் பரிதவிக்கும் ஏழை கூலித்தொழிலாளி மக்களுக்கு பட்டா வாங்கி தருவேன் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கதிர்வேல் நிருபர்களிடம் பேட்டி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பேருந்து நிலையம் அருகே நகரப்பகுதியில் உள்ள புளியந்தோப்பில் பலதரப்பட்ட சமுதாயத்தினர் வசிக்கும் கூலித் தொழிலாளிகள் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 80 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் அரசு மூலம் கிடைக்கும் எந்த ஒரு சலுகை களையும் செய்து கொள்ள முடியாமல் போராடி வருகின்றனர் காரணம் அதன் அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான சுப்பிரமணியர் கோயிலை பராமரிக்கும் குறிப்பிட்ட சில நிர்வாகிகள் தவறான முறையில் கோவில் பெயரில் பட்டா பெற்று இந்த இடம் எங்களது கோயிலூக்கு தான் சொந்தம் ஆகையால் நீங்கள் எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்தாலும் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் கப்பம் கட்டிவிட்டு தான் செய்ய வேண்டும் என அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ அமைச்சர் ஆகியோர்களிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தும் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டும் இதுநாள் வரையில் எந்த அரசுத் துறை அதிகாரிகளும் எம்எல்ஏ அமைச்சர்களும் செவி சாய்க்கவில்லை என குற்றசாட்டு வைத்துள்ளனர்.
ஆகையால் நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்த அப்பாவி மக்களை பார்த்து பதறிப்போன சமூக ஆர்வலரும் ஏழைகளுக்காக எந்த ஒரு ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் என்றும் போராடி பல்வேறு வழக்குகளுக்கு நீயாயம் பெற்றுத்தந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கதிர்வேல் இந்த வழக்கையும் கையில் எடுத்து வாதாடி வருகிறார்.
அவரிடம் நிருபர்கள் குழு சென்று இந்த வழக்கை பற்றி விசாரிதபோது அவர் இம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பரித்து சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனியாருக்குச் சொந்தமான கோவிலுக்கு பட்டா வாங்கியது தவறான ஒரு செயல் இது சம்பந்தமாக குறிஞ்சிப்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன் கண்டிப்பாக இப்பகுதி மக்களுக்கு நீதி மன்றத்தின் மூலம் வழக்காடி பட்டா பெற்றுத் தருவேன் எனவும் சட்டத்துக்குப் புறம்பாக தனியார் கோயில் பெயரில் பட்டா பெற்ற நிர்வாகிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும் தண்டனை பெற்றுத் தருவேன் என வழக்கறிஞர் கதிர்வேல் அவர்கள் நிருபர்களிடம் கூறினார் .
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்