அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கோட்லாம்பாக்கத்தில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
புதுப்பேட்டை, அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார்.
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் ஏழுமலை, ராணி, கோமதி, வசந்தி, சக்திவேல், சந்தியா, ராமு, நாஸ்னீன் மற்றும் பொதுமக்கள் ஊராட்சியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறி அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூட்டத்தை புறக்கணித்து விட்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர். இதனால் கிராம சபை கூட்டம் பாதியில் நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.