புவனகிரி அடுத்த கீரப்பாளையம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சியில் குடிநீர், சாலை, கழிவுநீர், கால்வாய் வசதி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசுகையில், ஒவ்வொரு ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால் ஊராட்சி வளர்ச்சி பெறும் என்றார். கூட்டத்தில் அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை வாங்கும் புதிய திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது.
இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. நிலக்கரி வாங்குவதை மாநில அரசுகளுக்கு மாற்றி விட்டு பிரதமர் நரேந்திரமோடி தப்பிக்க முயற்சிக்கிறார் என்றார்.