0 0
Read Time:1 Minute, 39 Second

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜகவுக்கு 20 தொகுதி களும் தமாகாவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. சேலம் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட இரா. அருள், பென்னாகரம் தொகுதியில், அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தருமபுரி தொகுதியில் வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 18 தொகுதிகளில் பாமக தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ம.க. தற்போது அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %