தரங்கம்பாடி, மே.3: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதமான கடந்த மாதம் 30 நாட்கள் நோன்பு கடை பிடித்தனர். அந்த 30 நாட்களும் சூரிய உதயத்துக்கு முன்பு உணவு உட்கொண்டு நோன்பு இருந்தனர். மேலும் தினமும் ஐந்து வேளையும் தொழுதல், தர்ம காரியங்கள் அதிகம் செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டனர்.
நோன்பு மேற்கொண்ட ரமலான் மாதம் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில் மாத தலைப்பிறை தென்பட்டதையடுத்து புனித ரம்ஜான் பண்டிகையை செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடினார்கள்.
புனித ரம்ஜான் பண்டிகையையொட்டி தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடி, பொறையார், சங்கரன்பந்தல், வடகரை, ஆக்கூர், திருச்சம்பள்ளி, கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு. சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் முத்தவல்லி பஷீர் அகமது, செயலாளர் நூருல்லாஹ், பொருளாளர் ஹலில் ரகுமான், இமாம் கமாலுதீன்,திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் ஏராளமானோர் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
படவிளக்கம்: ஆயப்பாடி பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.