பொறையாறு, செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் முன்னிலை வகித்தார். ராமலிங்கம் எம்.பி. குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக்சந்திரகுமார் வரவேற்று பேசினார். முகாமில் மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.