0 0
Read Time:4 Minute, 31 Second

தருமபுர ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சியை அரசியலாக்க வேண்டாம் என்று பா.ஜ.க விற்கு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என் ராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்று.
ஆண்டு தோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும் இந்த நிகழ்ச்சியை நடத்துவோம் என்று கூறி ஒரு பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் கோட்டாட்சியர் பாலாஜி

இது தொடர்பாக சட்டமன்றத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்து பேசுகையில், பட்டினப் பிரவேசம் குறித்து ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதிதான் நடைபெறும். எனவே, இது குறித்து வரும் 22ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்’ என்று கூறினார்.
ஆனால் இதை வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்தோடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் சிலர் ஆன்மீகத்திற்கு எதிரியாக தி.மு.க வை சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இது ஆதினங்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் எடுபடாது.
ஏனென்றால் தமிழகத்தில் 1500 திருக்கோவில்களில் ரூபாய் 1000 கோடியில் திருப்பணிகள்
ரூபாய்100 கோடி மதிப்பில் அன்னதானத் திட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
எனவே இந்த அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல.

எனவே பா.ஜ.க போன்ற ஒரு சில கட்சியினர் மத கலாச்சாரத்தை அரசியலாக்க வேண்டாம்.
மதத்தின் பெயரால் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்கி அரசியல் நடத்தும் பா‌.ஜ.க வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரியின் ஒப்புதலுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்..

இவ்வாறு ஜெமினி எம்.என்.ராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %