0 0
Read Time:5 Minute, 31 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

மயிலாடுதுறை, மே- 05;
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி. ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பங்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மயிலாடுதுறை மாப்படுகை கடலங்குடி சாலையில் காவேரி ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நபர்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் 4 கோடியே 40 இலட்சம் செலவில் பாலம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாலப்பணியினை விரையாகவும், தரமாகவும், குறிப்பிட்ட
காலத்திற்குள்ளும் முடிக்குமாறு சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கும், ஒப்பந்தகாரருக்கும் உத்தரவிட்டார்.

பாலப்பணியினை ஆய்வு செய்தபின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 10995 மாணவ மாணவீகள் தேர்வு எழுதுகின்றனர், இதில் 5042 மாணவர்களும் 5353 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். அரசு பள்ளிகளில் 36 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது, தனிதேர்வு மையங்கள் 2 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 53 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகள்: ஆண்கள் 27 பேரும் பெண்கள் 26 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக முன்கூட்டியே குடிநீர், மின்சார வசதி, போக்குவரந்து வசதி செய்து தரப்பட்டுள்ளன.

தொடர்ந்து தற்போது ஆய்வு செய்த பாலம் கட்டும் பணியானது மயிலாடுதுறை மாப்படுகை கடலங்குடி சாலையில் காவேரி ஆற்றின் குறுக்கே 4 கோடியே 40 இலட்சம் செலவில் கட்டப்படுகிறது. நபார்டு திட்டத்தின் கீழ் இப்பணி நடைபெறுகிறது. காவேரியில் தண்ணீர் வருவதற்குள் கீழ்தரைமட்ட பாலப்பணிகள் நிறைவடையும் மூன்று முதல் நான்கு மாதத்திற்குள் இப்பணிகள் முழுமையாக இப்பாலம் கட்டி முடிக்கப்படும்.

அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் நிர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 870 கிலோமீட்டர் தூரம் 8 கோடியே 50 இலட்சம் செலவின் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 24- ஆம் தேதி முதல் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 10 நாளில் இதுவரை 12 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதாவது 12 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளது. மொத்தம் மாவட்டத்தில் 49 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கண்காணிக்க 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை அலுவலர், வேளாண்மை உழவர் உற்பத்தி குழு, ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இக்குழுவில் அடங்குவர். தூர்வாரும் பணியானது மாவட்டத்தில் இம்மாதம் 20-ஆம் தேதி நிறைவுபெறும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, நிர்வளத்துறை செயற்பொறியாளர் வே.சண்முகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேனுகா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியளர் கண்ணப்பன், உதவிப்பொறியாளார் பாலசுப்ரமணியன், உதவிப்பொறியாளார் கார்த்திக், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், சுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %