0 0
Read Time:1 Minute, 25 Second

சீர்காழி அருகே, வள்ளுவக்குடி மகா சிம்ம காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

சீர்காழி அருகே, வள்ளுவக்குடி கிராமம் மெயின் ரோட்டில் பழமையான மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கியது.

நேற்று 2-ம் கால யாக பூஜையும் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கை யோடு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புனிதநீர் கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் கன்னிகாபரமேஸ்வரி, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளிலும் குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில் ஊராட்சி தலைவர் பத்மா, ஊர்த்தலைவர் கலியமூர்த்தி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %