சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
• கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை அரசு தகவல் தொகுப்பு விபரம் மையம் ஓய்வூதிய இயக்ககம் மற்றும் சிறு சேமிப்பு இயக்குநரகம் ஆகியவற்றின் செயல் திறனை மேம்படுத்த அரசு அத்துறைகளை மறுசீரமைக்கும்
• மேலும் இம்மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குகள் விதித் தொகுப்பு திருத்தி எழுதப்படும்
• அரசு பொது நிதி நிறுவனங்களின் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
• மாநில பொது நிறுவனங்களின் கழகத்தை வலுப்படுத்தப்படும்
• பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க நிதித்துறை வல்லுநர்கள் கணக்கில் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களின் ஆலோசனைகள் தரப்படும்
• கடன் வாங்குவதால் ஏற்படும் செலவை குறைப்பதற்காகவும் மாற்று கடன் சார்ந்த இடர்களை குறைப்பதற்காகவும் பொது கடனை ஆய்வு செய்ய மறுசீரமைப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்
• அடிப்படையில் அரசு முடிவுகளை மேற்கொள்வதற்காக பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி குறியீடுகளின் போக்குகளை கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்வதற்கு, ஒரு நிதி பகுப்பாய்வு மையம் நிறுவப்படும்
• நிதித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது அவசியமாகும்
• நிதித்துறை அலுவலர்களுக்கு தேவையான பயிற்சி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட புதிய பயிற்சி கொள்கை உருவாக்கப்படும்
• பழைய ஓய்வூதியத்திட்டத்தில் ஆண்டுக்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது
• சென்னைப் புறநகர் ரயில் அமைப்பின் குறிப்பாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வரை, தென்னக ரயில்வேயுடன் இணைந்து குளிர்பதன ரயில் பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் அதற்கான சாத்தியகூறுகள் ஆய்வு செய்யப்படும்
உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.