0 0
Read Time:2 Minute, 11 Second

மயிலாடுதுறையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 70 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய 4 தாலுகாகளிலும் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

மேலும் மார்ச் மாதம் முதல் மாவட்டத்திலுள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்க போதிய கிடங்கு வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் ஒருசில நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து அகற்றப்படாமல், அங்கேயே தார்ப்பாய்கள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையால் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து உள்ளன.

மழையில் நெல் மூட்டைகள் நனைவதால் நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் கிடங்களுக்கு ஏற்றிச் செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில் நனைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைக்க தொடங்கிவிடும் என்றும் விவசாயிகள் கவலையுடன் கூறினா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %