0 0
Read Time:2 Minute, 2 Second

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ஒப்பந்ததாரர்களுடன் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு பணிகளும் தரமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.

சாலைப்பணிகள் நடைபெறும்போது நான் நேரில் வந்து அவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்வேன். எக்காரணத்தை கொண்டும் பணிகளை காலதாமதம் செய்யக்கூடாது. குறித்த காலத்திற்குள் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட திட்ட இயக்குனர் முருகண்ணன், ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி பொறியாளர் சாமிநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %